28/Jul/2021 06:47:21
ஈரோடு, ஜூலை: ஈரோடு காசிபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி பாஜகவினர் மனு அளித்தனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:
ஈரோடு காசிபாளையம் 4-ஆவது மண்டலம் 47-ஆவது வார்டு திருப்பதி கார்டன் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து படிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது