logo
சத்தியமங்கலம்: விளைச்சல் குறைவால் விலை உயர்வு கோழிக்கொண்டை பூக்கள் கிலோ ரூ.120- க்கு விற்பனை

சத்தியமங்கலம்: விளைச்சல் குறைவால் விலை உயர்வு கோழிக்கொண்டை பூக்கள் கிலோ ரூ.120- க்கு விற்பனை

28/Jul/2021 06:33:51

ஈரோடு,  ஜூலை:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். விவசாய தோட்டங்களில் தனியாகவும் வாழைத் தோட்டங்களில் ஊடுபயிராகவும் பயிரிட்டுள்ளனர். 

தற்போது முகூர்த்த சீசன் இல்லாத நிலையிலும் ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷங்களுக்கு பயன்படுத்தப்படும் கோழிக்கொண்டை பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. மேலும் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி பரப்பளவு குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கோழிக்கொண்டை பூக்கள் வரத்து குறைந்துள்ளது. 

இதன் காரணமாக தற்போது பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கொண்டை பூ கிலோ ரூ. 30 க்கு விற்பனையான நிலையில் நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கிலோ ரூ. 120 க்கு விற்பனையானது. பூக்கள் வரத்து குறைந்ததால் கோழிக்கொண்டை பூக்கள் விலை அதிகரிப்பின் காரணமாக இதனை  பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Top