logo
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி   ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

27/Jul/2021 12:20:13

ஈரோடு, ஜூலை: தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி  தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சஙகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு   அளிக்கப்பட்டது. அந்த மனுவில்,|கடந்த 2017 ஜூன்  மாதம் முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக மணல் வினியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக  தமிழகத்தில் அதிக அளிவில் இயஙக வந்த மணல் குவாரிகள் நிறுத்தப்ட்டு தற்போது 6 குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 

இதனால்,  இத்தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 55,000 லாரிகளும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் 6  குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் தினமும் 60ஆயிரம் யூனிட் தேவைப்படும் தமிழகத்தில் தற்போது தினமும் 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அனுமதியின்றி ஆறுகளில் திருட்டு மணல் எடுத்து அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். 

எனவே மணல் தட்டுப்பாட்டை தவிர்த்திட நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும் என்றும் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், காவிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும், புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top