logo
குடிநீர் வசதி கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு

குடிநீர் வசதி கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு

27/Jul/2021 12:16:40

ஈரோடு,  ஜூலை:  ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பவானி, புன்னம் ஊராட்சி, வண்ணாம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை புகார் பெட்டியில் போட்டனர்.

அந்த மனுவிவரம் நாங்கள்  மேற்கண்ட பகுதியில்  150 குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தார்கள். நாங்களும் அந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்தோம். இந்நிலையில், திடீரென எங்கள் பகுதிக்கு குடிநீர் தொட்டி இணைப்பை அடைத்துவிட்டார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வராமல் கஷ்டப்பட்டு வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால் இதுவரை உரிய பதில் வரவில்லை. ஆகவே மீண்டும் எங்கள் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென பெண்கள் காலி குடங்களுடன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Top