26/Jul/2021 11:34:19
புதுக்கோட்டை, ஜூலை: ஆடி 18 -ஆம் பெருக்குக்கு முன்னதாக புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் பக்தர்கள் நீராட வசதி செய்ய வேண்டுமென பக்தர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதிலுள்ள பல்லவன் குளத்தின் சுற்றுப்புறமும் நான்கு வீதிகளிலும் கோவில்கள் உள்ளன. முக்கியமாக வடக்கு கரை பகுதியில் குடியிருப்பு களும் கோவில் நிர்வாக அலுவலகம் இருக்கின்றது .
பல்லவன்குளத்தில் பொது மக்கள் குளித்து, துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர். வருகின்ற ஆடி 18-ஆம் பெருக்கு அன்று புதுகை நகரில் வசிக்கும் திருமண புது மண தம்பதியர்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து இக்குளத்தின் படித்துறையில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். தற்போது குளத்துக்கு நீர்வரத்து நின்று போனதால் கழிவு நீராக மாறிப்போனது.