logo
புதுக்கோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையராக  நாகராஜ் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையராக நாகராஜ் பொறுப்பேற்பு

23/Jul/2021 01:01:14

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை நகராட்சியின் புதிய ஆணையராக நாகராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு தனியாக நகராட்சி ஆணையரை நியமிக்காமல் பொறுப்பு ஆணையர் மூலமாகவே கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நகராட்சி நிர்வாகம்  இயங்கி வருகிறது. அத்துடன், இடையிடையே புதிதாக  ஒரு சிலர் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாலும்  சில பல மாதங்கள் மட்டுமே புதுக்கோட்டையில்  பணியாற்றும் சூழ்நிலை இருந்து வந்தது.

இதன் காரணமாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நகராட்சியின் பொறுப்பு  ஆணையராக ஜீவாசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு நகராட்சியில் பல்வேறு பணிகளை செவ்வனே  மேற்கொண்டு வந்தார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் அரசு நிர்வாகத்தின்  பல்வேறு நிலைகளில் மாற்றங்களைச்செய்து வருகிறார். 

பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள் இடமாற்றம், பல்துறை  அரசுச்செயலாளர்கள் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு துறையாக மாற்றங்கள் செய்யப்பட்டுவரும் நிலையில், உள்ளாட்சித்துறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டது.

அதன் மூலம், புதுக்கோட்டைக்கு புதிய நகராட்சி ஆணையராக  தேனி நகராட்சியில் பணியாற்றி வந் நாகாராஜ் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக  வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.  பதவியேற்றுக் கொண்ட புதுக்கோட்டை நகராட்சி ஆணையருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Top