logo
அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில்..  எண்ணெயில்லை... திரியில்லை... ஆனால் தீச்சுடர்...!

அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில்.. எண்ணெயில்லை... திரியில்லை... ஆனால் தீச்சுடர்...!

21/Jul/2021 07:06:26


இமாச்சல பிரதேசத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஜ்வாலாமுகி கோயில் ஒன்றாகும். இந்தியாவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜ்வாலாமுகி கோயிலில் எந்த ஒரு சிலை இல்லையென்றாலும் கோயிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் 9வது சக்தி பீடமாக விளங்குகிறது. தேவியின் உடற்பகுதிகளில் நாக்குப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

கோயில் சிறப்பு : இந்தத் திருத்தலத்தில் சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள்.ஒவ்வொரு சக்தி பீடமும் ஒவ்வொரு சிறப்பினைப் பெற்றிருப்பது போன்று, இங்கே மகா காளியின் வடிவாகவும், கொளுந்து விட்டெரியும் ஜ்வாலையாகவும், ஜ்வாலாமுகி திகழ்கிறாள்.

இங்குள்ள பாறைகளிலிருந்து நெருப்பு உமிழ்ந்து கொண்டே உள்ளது. இங்கு உமிழும் நெருப்பே ஜ்வாலாமுகி தேவியின் உருவமாகவும், கருவறையாகவும் பூசிக்கப்படுகிறது.காலம் காலமாக இந்த இடங்களில் இருக்கும் பழமையான பாறையின் இடுக்குகளில் இருந்து நீலநிறமான தீ ஜ்வாலைகள் இயற்கையாகவே அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த ஜ்வாலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றனவாம்.

சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜ்வாலைகள் வணங்கப்படுகின்றன.இந்த கோயிலில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன, அவை வாசிணி, அன்னபூர்ணா, சந்தி, மகாக்கலி, ஹிங்லஜ், விந்தியா, மகாலட்சுமி, சரஸ்வதி, அம்பிகா மற்றும் அஞ்சி தேவி.

கோயில் திருவிழா :ஒவ்வொரு ஆண்டும்; நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பலவித பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. துர்க்கா சப்தசதி வாசிக்கப்படுகிறது, தினமும் ஐந்து முறை ஆரத்தி எடுக்கிறார்கள்.

பிரார்த்தனை : பில்லி, சூன்யம், ஏவல் போன்ற செய்வினைகள் விலகவும், மனதில் வேதனைகள் குறையவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். பில்லி, சூன்யம், ஏவல் விரட்டும் மந்திரவாதிகள் இங்கு வந்து யந்திரபூஜை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் பாலும், நீரும் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


Top