logo
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

16/Jul/2021 05:14:36

புதுக்கோட்டை, ஜூலை:   புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 -ஆம் வகுப்புமுதல் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு  1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்பஅட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடனும்,

9-ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ,குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், முந்தைய வகுப்பில் 40 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பட்டியல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகிய ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 9-ஆம் வகுப்புமுதல் கல்லூரி வரை பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1, அவர்களது வாசிப்பாளர்களின்  விவரம் ஆகியவற்றுடன்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலகம்,  புதுக்கோட்டை என்ற முகவரிக்கு 31. 7.2021-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04322 - 223678 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். 

Top