logo
முதுகுளத்தூர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி?

முதுகுளத்தூர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி?

20/Dec/2020 07:42:39

முதுகுளத்தூர், டிச: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் போட்டியிட வாய்ப்புள்ளதாக பரவிய தகவலை அடுத்து, அமமுக-வினர் 2021-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் போட்டியிட்டு வென்ற தொகுதி எனும் பெருமைக்குரியது. இத்தொகுதியில் 2011 – 2015ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதினெட்டாம் படியான் மகன் முருகன் போட்டியிட்டு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றார்.

தென்மாவட்டங்களில் ராசியான தொகுதி என்பதினாலேயே, அதிமுக  பொதுச்செயலாளர் ஜெயலலிதா  முதுகுளத்தூர் தொகுதியிலிருந்து தனது முதல் பரப்புரையை தொடங்கினார். தற்போது அதிமுகவிலிருந்து அமமுகவில் முதுகுளத்தூர் ஒன்றியச்செயலாளராக உள்ள, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் தொகுதி மக்களிடமும், இளைஞர்களிடமும் நன்மதிப்பை பெற்று வருகிறார்.

சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் அமமுக சார்பாக போட்டியிட்ட மாவட்ட செயலாளர் வ.து.ந ஆனந்த் தமிழகத்திலேயே அதிகப்படியாக 40,000 ஓட்டுக்கள் பெற்றிருந்தார்.ஆதலால் முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதை அறிந்து அமமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.



Top