logo
எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு  விலை நிர்ணயித்தால்தான் விவசாயிகளுக்கு முன்னேற்றம் வரும்:  இரா. முத்தரசன் பேட்டி

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு விலை நிர்ணயித்தால்தான் விவசாயிகளுக்கு முன்னேற்றம் வரும்: இரா. முத்தரசன் பேட்டி

03/Oct/2020 04:30:42

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று(அக்.3)வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து வரும் 12-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகம் ரவுடிகளின் ராஜ்யமாக மாறி வருகிறது.

கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது கண்டனத்துக்குரியது.அக்டோபர் 7 -ஆம் தேதி முக்கியமான நாள் அல்ல அதுவும் எப்போதும் போல் வரும் ஒரு நாள்தான். ராகுல் காந்தியைக் கைது செய்து தாக்கியது என்பதை வன்மையாக கண்டிக்கதக்கது. மத்திய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விளை பொருள்களுக்கு  விலை நிர்ணயித்தால்தான் விவசாயிகள் முன்னேற்றம் அடைவார்கள். தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும்.

பாபர்மசூதி தீர்ப்பு என்பது குற்றம் செய்துவிட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணத்தை அனைவருக்கும் வரவழைக்கிறது.இந்த வழக்கில் சிபிஐ திறமையாக செயல்பட வில்லை.பாபர் மசூதி வழக்கில் விசாரித்த உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு என்பது கண்டிக்கத்தக்கது சட்டவிரோதமானது என்று தீர்ப்புக் கூறியது.

ஆனால், சிபிஐ அதற்குண்டான ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இருப்பது வேதனைக்குரியது.2ஜி வழக்கு என்பது வேறு பாபர் மசூதி வழக்கு என்பது வேறு.பாபர் மசூதி தீர்ப்பு பல்வேறு கேள்விகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரியதா அல்லது சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு பெரியாதா என்ற விவாதம் தற்போது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது என்றார்.


Top