logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த நிதி ஆண்டில் ரூ.5610.83 கோடி கடன் வழங்க இலக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த நிதி ஆண்டில் ரூ.5610.83 கோடி கடன் வழங்க இலக்கு

15/Jul/2021 11:50:42

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-22 நிதி ஆண்டில் ரூ.5610.23 கோடி கடன் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் (13.7.2021) நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  2021-2022-ம் ஆண்டு கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் இ.லட்சையா பெற்றுக்கொண்டார். 


புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன்  ஓவர்சீஸ் வங்கி 2021-22-ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்க ஏதுவாக கடன் திட்ட அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளனது.


கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.4424.15 கோடியும், தொழில் துறைக்கு ரூ.262.61 கோடியும், கல்விக்கடன், வீட்டுக்கடன்மற்றும் இதரமற்றும் துறைகளுக்கு என மொத்தம் ரூ.924.07 கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கிமேலாளர் ஆர்.ரமேஷ், மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி,  மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி, .மாவட்ட தாட்கோ, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம், மாவட்ட நபார்டு வங்கி, கிராமிய சுயவேலைாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top