logo
கொரோனாவில் குணமடைந்தவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும்  பின் கவனிப்பு வார்டுகள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  தகவல்

கொரோனாவில் குணமடைந்தவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் பின் கவனிப்பு வார்டுகள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

03/Oct/2020 02:09:48

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர்  மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தலைமையில், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ- பா.ஆறுமுகம் முன்னிலையில்  இன்று (03.10.2020) நடைபெற்ற  108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம்  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது.

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மாபெரும் வேலைவாய்ப்பபு முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறுநி இந்த முகாமில் மருத்துவ உதவியாளா; பணியிடத்திற்கு 400 நபர்களும், ஓட்டுநர் பணியிடத்திற்கு 400 நபர்களும் என மொத்தம் 800 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ள வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே,  108 ஆம்புலன்ஸ் சேவை 1,000 எண்ணிக்கையில் இயங்கி வருகிறது. தற்பொழுது கொரோனா காலத்தில் முதல்வர் உத்தரவிட்டபடி ரூ.103 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 500 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் வாங்கப்படவுள்ளது. இதில், ஓரிரு வாரங்களுக்கு முன்பு 108 எண்ணிக்கையில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களில் மேலும் 100 எண்ணிக்கையில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவை  துவக்கி வைக்கப்பட உள்ளது.108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள் ஒன்றுக்கு 15,000 அழைப்புகள் பயனாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. இதன் மூலம் 4,000 நபர்கள் தினமும் பயனடைந்து வருகின்றனா;.

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மட்டும் 2.50 லட்சம் கொரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்துள்ளனர்.  இதே போன்று 5.50 லட்சம் நபர்கள் பிறசேவைகளுக்கு 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். 24 மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் 108 அவசரச் சிகிச்சை ஊர்தி சேவை ஒரு மகத்தான சேவைத்துறையாகும்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடித்து தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். 

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் பக்க விளைவுகள் இல்லை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்வதற்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இதே போன்று தன்னார்வலர்களை தேர்வு செய்து கொரோனா பரிசோதனை செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

 கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பின் கவனிப்பு வார்டுகள் தொடக்கம்:

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்த 5,52,938 நபர்களுக்கு சிகிச்சை:  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கான பின் கவனிப்பு வார்டுகள் துவங்கப்பட்டு வருகிறது. எனவே கொரோனாவால் குணமடைந்தவர்கள் அவசியம் அந்த வார்டுகளுக்கு சென்று நுரையீரல் செயல்பாடு, மூச்சுவிடுதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை தவறாமல் செய்து கொள்ள வேண்டும் என்றார்  அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர்.

இதில், மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சி.உதயகுமார், அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவா; வி.ராமசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சாம்பசிவம், GVK EMRI நிறுவன மாநில செயல் தலைவர் செல்வக்குமார், மனிதவள மேம்பாட்டு தலைவர் அசோக்குமார், மண்டல மேலாளர் பிரசாத், மாவட்ட மேலாளா; மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  கண்ணன்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top