logo
இன்று முதல் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலை பெறலாம்: அமைச்சர் ஆர்.காமராஜ்

இன்று முதல் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலை பெறலாம்: அமைச்சர் ஆர்.காமராஜ்

03/Oct/2020 12:06:02

திருவாரூர் மாவட்டத்தில், சனிக்கிழமை (அக்.3) முதல் செயல்படவுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு அறிவித்துள்ள கூடுதல் விலையை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்..

இது தொடர்பாக அவர் தனது சுட்டுரை பதிவி தெரிவித்தாதவது: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு காரிப் பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சனிக்கிழமை முதல் முழுவீச்சில் செயல்படத் தொடங்குகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குவிண்டாலுக்கு ரூ.53 என்ற கூடுதல் விலையோடு, விவசாயிகள் தங்களது நெல்லுக்கான தொகையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த கொள்முதல் நிலையங்கள் பட்டியலின்படி, திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 189 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் எனவும் அதில் அதிகபட்சமாக மன்னார்குடி வட்டத்தில் 78 கொள்முதல் நிலையங்களும், நீடாமங்கலம் வட்டத்தில் 30 கொள்முதல் நிலையங்களும் இயங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Top