18/Dec/2020 12:12:26
ஈரோடு- டிச: ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கியின் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.