logo
வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

10/Jul/2021 01:26:18

ஈரோடு, ஜூலை: ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில்  ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து  கோரிக்கை மனு  அளித்தனர்.

கோரிக்கை மனு விவரம்: சாலைப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள மினி ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் டாக்ஸி, கால் டாக்ஸி, சுற்றுலா வேன், பயணிகள் போக்குவரத்து மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் , லாரி, பஸ் ஓட்டுனர்கள், ஒர்க் ஷாப் தொழிலில் ஈடுபட்டுள்ள மெக்கானிக்குகள்,பெயிண்டர், டிங்கர் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன பராமரிப்பாளர்கள், உதிரிப்பாக,

விற்பனை யாளர்கள் ,ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துனர்கள், மற்றும் அனைத்து வகையான அரசு போக்குவரத்து நீங்கலாக சாலை போக்குவரத்து ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் இத்தொழிலை நம்பி உள்ளனர். இந்த சங்கத்தில்

தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 25 லட்சம் பேர் இத்தொழிலில் உள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தான் இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.கொரோனா தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு மூலம் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் வாகன இயக்கம் என்பது இன்னமும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும். 

மாநிலத்தில் தனியார் போக்குவரத்து இயக்கப்படும் வாகனங்கள் சிறிய முதலீட்டுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தான் வாங்கி இயக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மாதாந்திர கடன் தொகை செலுத்த இயலாத நிலைமை உள்ளது எனவே டிசம்பர் மாதம் வரை மாதாந்திரத் தவணை தொகையை செலுத்துவதை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி மற்றும் அரசிடம் வலியுறுத்த வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்று வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Top