logo
வேளாண் பணிகளுக்கு விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண்  இயந்திரங்களை பெறலாம்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

வேளாண் பணிகளுக்கு விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பெறலாம்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

09/Jul/2021 10:22:39

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் பொறியியல் துறை இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மானாவாரி, கிணறு மற்றும் இதர பாசன விவசாயத்தில், நில உழவுப் பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேளாண்மை இயந்திரமயமாக்கல் பணிகளை வேளாண் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டத்தில், உழுவை இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 -க்கும், மண் தள்ளும் இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 840 -க்கும், மினி பொக்லைன் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 -க்கும், புதிய நெல் அறுவடை இயந்திரம் செயின்மாடல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,415 -க்கும் வழங்கப்பட்டு  வருகிறது.

 மேலும் உழுவை இயந்திரங்களில் இணைப்பு கருவிகளாக, கடலை பிடுங்கும் இயந்திரம், கடலை கொடியிலிருந்து  கடலைக்காய் பிரிக்கும் இயந்திரம், விதை  விதைக்கும் இயந்திரம், கரும்புதோகைகளை துகள்களாக்கும் இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரங்கள் என பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்பக்  கருவிகளும், டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு  வருகிறது.

சிறுபாசன திட்டத்தில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொள்ள ஒரு பணியிடத்திற்கு ரூ.500 -க்கும், ஆழ்துளைக்கிணறு அமைக்க ரோட்டரி டிரில் ஒரு மீட்டருக்கு ரூ.130 என அரசு நிர்ணயித்துள்ள குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு  வழங்;கப்பட்டு வருகிறது.

எனவே, மேற்கண்ட இயந்திரங்களை வாடகைக்குப் பெற்று பயனடைய புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டார விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை  அலுவலகத்தினையும்.

மேலும் விவரங்களுக்கு 94434 05997 என்ற அலைபேசி எண்ணையும், அறந்தாங்கி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, இராஜேந்திரபுரம், பட்டுக்கோட்டை ரோடு, அறந்தாங்கி அலுவலகத்தினையும், மேலும் விவங்களுக்கு 94421 78763 என்ற அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். 

மேலும்,  புதுக்கோட்டையில் தலைமையிடத்தில் உள்ள செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை  அலுவலகத்தினையும், மேலும் விவரங்களுக்கு 04322 221816 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயனடையலாம். 

Top