logo
மூன்றாவது அலையை சமாளிக்க  ஸ்டெர்லைட் உள்பட பல்வேறு ஆலைகளிலும் ஆக்சிஜன்  உற்பத்தி தொடரும் : அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

மூன்றாவது அலையை சமாளிக்க ஸ்டெர்லைட் உள்பட பல்வேறு ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி தொடரும் : அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

07/Jul/2021 11:29:56

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி  மதிப்பில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் குளத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

உள் விளையாட்டு அரங்கம் ஸ்டேடியம் கட்டப்பட்டு வரும் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் அமைச்சர் மெய்யநாதன்அளித்த பேட்டி: தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் விளையாட்டு துறைக்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.லைநோக்குத் திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது.ஒலிம்பிக் பயிற்சி பெறுவதற்கான கட்டமைப்புகள் விளையாட்டு கூடங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது.முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்கு  தமிழகத்தில் இருந்து ஐந்து வீரர் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்திலிருந்து 11 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.11 பேருக்கும் ஊக்கத்தொகையாக ரூ 5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.வரும் காலங்களில் சிறிய கிராமபுரத்தில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு  ஏதுவாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் ஸ்போர்ட்ஸ் சிட்டி தொடங்கப்பட உள்ளது.தமிழகத்தின் பல இடங்களில் பயிற்சியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விளையாட்டு பிரிவிற்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த காலங்களில் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொண்டதால் தமிழகம் விளையாட்டுத்துறையில் பின்தங்கியுள்ளது தற்போது தமிழக முதல்வர் விளையாட்டு துறையை முத்திரை பதிக்கும் துறையாக மாற்றிக் காட்ட உள்ளார்.பெண்கள்தான் பல்வேறு துறைகளில் சாதனை புரிகின்றனர்

இரண்டாவது அலையைத் கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் வரவழைத்து பல்வேறு உயிர்களை காப்பாற்றினார்.கடந்த ஆட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட காலம் ஓர் ஆண்டு. ஆனால் தமிழக முதல்வர் இரண்டாவது அலையை  கட்டுப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட காலம் 45 நாட்கள்.

ஆக்சிஜன் நமது உயிர்காக்கும் பிரச்சனை மருத்துவ துறைக்கு மிகவும் முக்கியமானது ஆக்சிஜன்.மூன்றாவது அலையை  எதிர்கொள்ள வேண்டுமானால் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தற்போது ஸ்டெர்லைட் உட்பட எங்கெங்கெல்லாம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது அங்கு தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.

திருப்பூரில் சிந்தடிக் மைதானம் அமைப்பதற்கு 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தஞ்சாவூர் திருவாரூர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிந்தடிக் மைதானங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

கடந்த ஆட்சி காலத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளது இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடுவார் என்றார்.


Top