logo
ஈரோடு அரசு மருத்துவமனையில்  பிரசவத்தில் இறந்த குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்கள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் இறந்த குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்கள்

06/Jul/2021 12:13:53

ஈரோடு, ஜூலை: ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (27). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார்கர்ப்பிணியான இவரது மனைவி ரமணியை பிரசவத்துக்காக  ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை  அனுமதிக்கப்பட்டார்.

ரமணியை  பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை நன்றாக இருப்பதாகவும் சுகப்பிரசவம் தான் என்று கூறினார்களாம். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை ரமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. திடீர் என டாக்டர்கள் அறுவைச்சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க முடியும் என்றும், குழந்தை நிலை மோசமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேஷ் மற்றும் உறவினர்கள் திடீரென குழந்தை பிறக்க காரணம் என்ன குழந்தைக்கு என்னென்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் எந்த ஒரு பதிலும் அங்கிருந்த டாக்டர்கள் கூறவில்லை. ஒரு துண்டு சீட்டில் மட்டும் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மற்றும் உறவினர்கள் இறந்த பெண் குழந்தையுடன்  நியாயம் கேட்டு ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி ஒரு ஆட்டோ மூலம் மீண்டும் ஈரோடு அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தாசில்தார் பாலசுப்பிரமணியம், டவுன் டி.எஸ்.பி.ராஜு குழந்தை உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ஆர்.டி.. விசாரணைக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும  புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆர்டிஓ பிரேமலதா ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காட்சி வைக்கப்பட்டது.

Top