05/Jul/2021 11:53:01
புதுக்கோட்டை, ஜூலை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்கள் அரசு அறிவித்தபடி திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை நகரில் வேதநாயகியுடனுறை சாந்தநாதசுவாமி கோவில் அரியநாட்சி அம்மன்கோவில் தெற்கு நான்காம் வீதியிலுள்ள தண்டாயுதபாணி திருகோயில், ஸ்ரீ பிரஹதாம் பாள்கோயில், திருவப்பூர் முத்துமாரியம்மன்கோயில், தெற்கு3-ஆம் வீதியில் உள்ள ஆஞ்நேயர் கோயில்.
பிருந்தாவனம்ஆஞ்நேயர் கோயில் மற்றும் குமரமலை பாலதண்டாயு தபாணி, பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயில்திருவேங்கைவாசல் பிரகதம்பாள் உடனுறை வியாக்ர புரீஸ்வரர் கோவில்,திருவரங்குளம் சிவன் கோயில்.
புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில்,
திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்
கோயில், நார்த்தாமலை முத்துமாரியம்மன், திருமயம் சிவன்கோயில், இலுப்பூரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில்,
தரம்தூக்கி பிடாரி அம்மன்கோயில்.
இருந்திரப்பட்டி முத்துமாரி அம்மன்கோயில், அன்னவாசல் அருகே தான்றீஸ்வரம் சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமி கோயில், அன்னவாசல் தர்மசம் வர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோயில், உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் கொரோனா தடுப்பு வழிமுறைகளை களைப் பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.