logo
ஈரோட்டில் ஜூலை 5- முதல் பஸ் போக்குவரத்து -டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி-இ -பாஸ் முறையை ரத்து

ஈரோட்டில் ஜூலை 5- முதல் பஸ் போக்குவரத்து -டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி-இ -பாஸ் முறையை ரத்து

03/Jul/2021 06:24:34

ஈரோடு, ஜூலை:  கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஈரோடு மாவட்டத்தில் 5-ஆம் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்குவதுடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான -பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 10 -ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய உணர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்றின் தாக்கம் குறையாததால் மே 24 -ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்தது.

பின்னர் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. அதன்படி வரும் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோட்டில் வரும் திங்கள்கிழமை(ஜூலை5) முதல் பொருட்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரங்குகள் அமைக்கும் அமைப்பாளர்கள் கொரோனா பரிசோதனை அல்லது இரண்டு தடுப்பூசிகள் போட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள்  அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறையின் பாதுகாப்பட்ட சின்னங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுஉடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களில் காற்றோட்ட வசதியுடன் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் திருவிழா மற்றும் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துணிக் கடைகள் நகைக் கடைகள் காற்றோட்ட வசதியுடன் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்திற்கு உள்ளேயும் மாவட்டத்திற்கு இடையையும் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கையில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட களுக்கிடையே பயணிக்க -பதிவு , -பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Top