logo
மக்காச் சோளப் படைப்புழு - விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கண்காட்சி முகாம்

மக்காச் சோளப் படைப்புழு - விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கண்காட்சி முகாம்

02/Oct/2020 06:48:30

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி மற்றும் வேளாண்துறை இணைந்து நடத்திய மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிழ்ச்சி மற்றும் கண்காட்சி ஆலங்குடி அருகே சூரன்விடுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மேலாத்தூர்  ஊராட்சித் தலைவர் கே.ஷோபாபுஷ்பராஜ் தலைமை வகித்தார். புதுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர்  .கிருஷ்ணமூர்த்தி  பங்கேற்று படைப்புழு தாக்குதல் தொடர்பானய புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்துப்  பேசுகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளுக்கு பயனுள்ள பல்வேறு திட்டங்களை விவசாயத்துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பாக உள்ள மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர;வு மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,800 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை வேளாண்த் துறையின் பரிந்துரைகளின் படி பின்பற்றினால் படைப்புழுவை எளிதில் கட்டுப்படுத்தி நல்ல மகசூலைப் பெறலாம் என்றார்.

 எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் பேசுகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்காக அறிவியல்பூர்வமான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. விவசாயிகள் விவசாய வல்லுநர்களின் வழிகாட்டுதலை பின்பற்றிநால்  பூச்சியைக் கட்டுப்படுத்தி இடு பொருட்கள் செலவைக் குறைத்து நல்ல மகசூலைப் பெறலாம்.. விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக எம்.எஸ. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஹெல்ப்லைன் 9942211044 மற்றும் 7299935543 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிறுவன பூச்சியியல் உதவிப்பேராசிரியர் ராஜாரமேஷ், இப்படைப்புழு மக்காச்சோளம் மட்டுமின்றி நெல், சோளம், கரும்பு, கடலை, தக்காளி, சிறுதானியாங்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆறு பருவநிலைகளைக் கொண்ட இந்தப்புழுவின்  முதல் மூன்று இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தை சுரண்டித்தின்று பாதிப்பை உண்டாக்கும். வளர;ந்த புழுக்கள் (4-6-ஆம்நிலை) இலையுறையினுள் சென்று கடித்து பாதிப்பை உண்டாக்கும். இதனால் இலைகளில் சிறு சிறு துளைகள் காணப்படும். இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த கோடை உழவு செய்தல், கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழுதல், பிவேரியா பேசியானா என்ற உயிரியல் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 10கிராம் என்றளவில் விதை நேர்த்திசெய்து விதைத்தல், 10 வரிசைக்கு 1 வரிசை விதைக்காமல் இடைவெளி விடுதல்; ஆகிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் அதிக அளவில் ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்க ஒரு ஏக்கருக்கு 20 என்ற அளவில் இனக்கவர்ச்சிபொறிகளை விதைத்த ஒரு வாரத்தில் வைத்தல், வரப்புப்பயிராக தட்டைப்பயிறு, எள், சூரியகாந்தி உளுந்து அல்லது பச்சைப்பயிறு ஊடுபயிராக சாகுபடிசெய்தல் 15 - 20 நாட்களுக்குள் அசாடிராக்டின் 1 சதம் - 2மில்லி, 40 - 45 நாட்களுக்குள்மெட்டாரைசியம் அனிசோபிலியே 8 கிராம் அல்லது ஸ்பைனிட்டோரம் 11.7 எஸ்.சி - 0.5 மில்லி 1லிட்டர் நீரில் கலந்து தெளித்தல் ஆகிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் படைப்புழுவை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றார்

நிகழ்ச்சியில், திருவரன்குளம் வேளாண்உதவி இயக்குநர்  .வெற்றிவேல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைத்தலைவர் எம்.வீரமுத்து, எம்.எஸ். சுவாதிநாதன் ஆராய்ச்சி நிறுவன தொழில் நுட்ப அலுவலர் ஆர்.வினோத் கண்ணா, வேளாண் அலுவலர்கள்  எஸ்.முகமது ரபி, வீ.ரெங்கசாமி ஆகியோர் பேசினர். மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள 60 விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர்கள் டி.விமலா வரவேற்றார். உதவித்திட்ட அலுவலர் கேஸ்.பிரிட்டோ நன்றி கூறினார்.

Top