logo
திருவரங்குளம் வேளாண், உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு  இணைய வழிபயிற்சி

திருவரங்குளம் வேளாண், உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இணைய வழிபயிற்சி

01/Jul/2021 09:44:24

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை அருகே  திருவரங்குளம் வேளாண், உழவர் நலத்துறை கீழ் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் இணைய வழியாக விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு சாகுபடி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது

வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து உதவி பேராசிரியர் டாக்டர்.தனலெட்சுமி இணைய வழியில் பங்கேற்று   தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு சாகுபடி தொழில்நுட்பங் களையும் ,மா,கொய்யா மரங்கில் செய்வதால் விவசாயி களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி வேண்டிய பருவம்,உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும்

வாழையில் அடர் நடவு தொடர்பான தொழில்நுட்பங்களையும் அடர் நடவு சாகுபடி செய்யபடும் பயிர்களுக்கான இடைவெளி பற்றியும்,குறைந்த இடங்களில் அதிக பயிர்களை  சாகுபடி செய்து எவ்வாறு கூடுதல் வருமானம் பெறலாம் என்றும் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.

மேலும், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளின் சந்தேகங்களை கேட்டறிந்து அதற்கான தொழில்நுட்ப ஆலோசனை களையும்  தெரிவித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.

Top