logo
டெல்டா , ஆல்பா  கொரோனாவுக்கு கோவேக்சின் மருந்தின் சிறப்பான செயல்பாடு : அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்

டெல்டா , ஆல்பா கொரோனாவுக்கு கோவேக்சின் மருந்தின் சிறப்பான செயல்பாடு : அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்

01/Jul/2021 07:37:45

டெல்டா, ஆல்பா வகை கரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நீடித்து செயல்படக் கூடியது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா தொற்று பிரிட்டனிலும், இந்தியாவிலும் முதலில்  டெல்டா வகை கண்டுபிடிக்கப்பட்டது. கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

அதன்பிறகு அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டெல்டா மற்றும் ஆல்பா வகை கரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி சிறப்பான எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது,நீடித்து செயல்படக் கூடியதாகவும் உள்ளது.

கோவேக்ஸின் செயல்பாடுகள் தொடர்பாக இதுவரை இருகட்ட பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில் இருந்து இந்த முடிவுகள் கிடைத்துள்ளன. மூன்றாவது கட்ட பரிசீலனை முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கும்.

அறிகுறியுடன் கூடிய கரோனாவுக்கு எதிராக 78 சதவீத செயல்திறனுடனும், அறிகுறி இல்லாத  கொரோனாவுக்கு எதிராக 70 சதவீத செயல்திறனுடனும் கோவேக்ஸின் செயல்படும் என்று அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top