logo
கணவரைக் கடத்தி சென்றுவிட்டதாக மனைவி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில்  புகார்

கணவரைக் கடத்தி சென்றுவிட்டதாக மனைவி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

02/Oct/2020 06:04:59

ஈரோடு: இது குறித்து, கரூர் மாவட்டம் வெள்ளியம்பாளையம் செல்வ நகர் காலனி பகுதியை சேர்ந்த காயத்ரி(22) என்பவர் ஈரோடு மாவட்ட  எஸ்.பி. அலுவலகத்தில்  அளித்த  புகார் மனுவில் கூறி இருப்பதாவது

 கரூர் மாவட்டம், புது வெள்ளியம்பாளையம் எனது சொந்த ஊர். கடந்த 2015-ஆம் ஆண்டு கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப்  பணிபுரிந்து அப்போது கொடுமுடி அடுத்த ஆட்டுக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து கடந்த 21.4.2016 -இல் கரூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் எனது கணவருடன் கொடுமுடி அருகே உள்ள குந்தாணி பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். எங்களுக்கு மூன்று வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார்.சதீஷ்குமார் பெற்றோர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கொடுமுடி பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்லி எங்களையும் குழந்தைகளும் பார்த்து செல்வார்கள். இப்படியாக நான்கு வருடங்கள் கடந்து விட்டன.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனக்கும் கணவருக்கும் இடையே நடந்த தகராறு காரணமாக நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றேன் கடந்த மாதம் என்னையும் குழந்தையையும் தவிக்க விட்டு எனது கணவர் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இது குறித்து எனது உறவினர் ளுடன் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது. எனது கணவர் வேறு வீடு பார்த்து  கடந்த 20-ஆம் தேதி அழைத்து செல்வதாக கூறினார், இதை நம்பி நானும் எனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன். அதன்பிறகு கடந்த 22-ஆம் தேதி நான் எனது உறவினர்களுடன் சதீஷ் வீட்டிற்கு சென்றபோது, அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் எனது ஜாதி பெயரைச்சொல்லி கேவலமாக பேசி இங்கு வரக்கூடாது என்றும் மீறி வந்தால் உன்னையும் குழந்தையையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக எனது கணவர் சதீஷ்குமாரை காணவில்லை அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது கலப்பு திருமணம் செய்து 4 வருடங்கள் குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்ற என்னை தற்போது எனது கணவரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற நோக்கில் எனது கணவரை கடத்தி சென்று விட்டார்கள். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும். மேலும், எனக்கும் குழந்தைக்கும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று  அந்த மனுவில் கூறியுள்ளார்.

Top