logo
14 தனியார் பள்ளிகள் மீது வந்த புகாரில் 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது:    அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

14 தனியார் பள்ளிகள் மீது வந்த புகாரில் 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

02/Oct/2020 05:16:24

ஈரோடு: கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 14 தனியார் பள்ளிகள் மீது வந்த புகாரில் 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன்

 

ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்து வருகின்றனர்..குறிப்பாக வேளாண்மை துறையை சார்ந்துள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு உள்ளனர்.அதற்கு காரணம் அனைத்து அனைகளிலும் தண்ணீர் கூடுதலாக இருக்கின்றது, இந்திய அளவில் தமிழகம் கொரோனோ வைரஸ் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குவதாக பாரத பிரதமர் அவர்களே பாராட்டி உள்ளார். தமிழக அரசை பொறுத்தவரையில் பள்ளிகளை திறப்பு என்பது தற்போதைக்கு  சாத்தியமில்லை. சூழ்நிலைகள் மாறிய பின்பு தான் அதனை பற்றி முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சிறப்பாக உள்ளது.தனிமனித சுதந்திரம் அதிகமாக உள்ளது.மேலும் நீர் பற்றாக்குறை இல்லா மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் மடிக்கணினிகள்  நடப்பாண்டில்  கொரோனோ பாதிப்பால் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பணிகளை வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் பாட புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 14 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்ததில் 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றமே உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் மலைப்பகுதிகள் உட்பட 52 இடங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கு சரியாக இணைய வசதி கிடைக்காத  காரணத்தால் அங்கு இணைய வசதி கிடைக்க அரசு குழு அமைத்து பரிசீலனை செய்து வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

முன்னதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை  சார்பில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழு பிரதமரின் சாலையோரம் வியாபாரிகளுக்கான கடனுதவி மற்றும் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழாவில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம்,தென்னரசு, சிவசுப்பிரமணி, .எம்.ஆர்.ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு   996 பயனாளிகளுக்கு ரூ.11.18 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினர். இதனைத்தொடர்ந்து ஆவின்பாலகம் திறந்து வைக்கப்பட்டது.

Top