logo
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: கடைசி இடத்தில் சென்னை..  முதலிடத்தில் மும்பை..

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: கடைசி இடத்தில் சென்னை.. முதலிடத்தில் மும்பை..

02/Oct/2020 11:32:26

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது. 

முன்னதாக, முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பிறகு ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. 

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 2-ஆவது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து கடைசி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

புள்ளிகள் பட்டியல்: 

அணிகள்

 ஆட்டங்கள் 

 வெற்றி 

 தோல்வி 

 புள்ளிகள் 

 நெட்   ரன்ரேட் 

 மும்பை

 4

 2

 2

 4

 +1.094

 தில்லி 

 3

 2

 1

 4

 +0.483

 கொல்கத்தா

 3

 2

 1

 4

 +0.117

 ராஜஸ்தான்

 3

 2

 1

 4

 -0.219

 பெங்களூர்

 3

 2

 1

 4

 -1.450

 பஞ்சாப்

 4

 1

 3

 2

 +0.521

 ஹைதராபாத்

 3

 1

 2

 2

 -0.228

  சென்னை

 3

 1

 2

 2

 -0.840

 

Top