logo
குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்திற்கான கூடுதல் அரிசியை ஜூலை மாதத்திலும், ஜுன் மாதத்திற்கான கூடுதல் அரிசியியை  இம்மாதம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்திற்கான கூடுதல் அரிசியை ஜூலை மாதத்திலும், ஜுன் மாதத்திற்கான கூடுதல் அரிசியியை இம்மாதம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்

23/Jun/2021 10:49:30

புதுக்கோட்டை, ஜூன்:   மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக ஊரடங்கு தற்போது 28.6.2021 வரை அமலில் உள்ள நிலையில் கூடுதல் உணவு தேவைக்காக பொது விநியோகத் திட்ட அரிசி வழங்கும் நோக்கத்தில், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன்படி பிரதான் மந்திரிகரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் உள்ள  அனைத்து பயனாளிகளுக்கும் பயனாளி ஒருவருக்கு 5 கிலோ வீதம் மே மற்றும் ஜூன் 2021 இரண்டு மாத காலத்திற்கு கூடுதல் அரிசி  விலையில்லாமல் வழங்க அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே 2021 மாதத்திற்கு கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசியினை ஜுலை  2021 மாதத்திலும், ஜூன் 2021 மாதத்திற்கு உரிய கூடுதலான அரிசியினை ஜூன் 2021 மாதம் முழுவதும்  அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்சொன்ன குடும்ப அட்டைதாரர்கள் ஜூன்- 2021 மாதம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ள நாட்களில் அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கூடுதலான அரிசியை பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா நோய்  தொற்றிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு முகக் கவசம் அணிந்தும் மற்றும் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்தும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுச் செல்லலாம்.

Top