logo
தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் குளறுபடி: மருத்துவத்துக்கான நோபல் பரிசு மத்திய அரசுக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் - ப.சிதம்பரம் விமர்சனம்

தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் குளறுபடி: மருத்துவத்துக்கான நோபல் பரிசு மத்திய அரசுக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் - ப.சிதம்பரம் விமர்சனம்

23/Jun/2021 10:35:20

புதுதில்லி, ஜூலை:  தினசரி தடுப்பூசி போடும் எண்ணிக்கை திங்கள்கிழமை  88 லட்சம் என்ற உலக சாதனையை எட்டிவிட்டு, செவ்வாய்க்கிழமை  54 லட்சமாக குறைந்திருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. .சிதம்பரம், மோடி  அரசின் இது போன்ற சாதனைகளுக்கு நோபல் பரிசே கூட கிடைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன் புதிய தடுப்பூசிக் கொள்கையை அறிவித்தார். அதன்படி மாநிலங்களுக்கான டுப்பூசிகளையும் மத்திய அரசே ஆர்வமாக வந்து தடுப்பூசி கொள்முதல் செய்து வழங்குகிறதுதடுப்பூசி தயாரிப்பாளர்களிடம்  75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசும் 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளும் பெறுகின்றன.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான நபர்கள் அனைவருக்கும்  நேரடியாக வந்தாலே தடுப்பூசி செலுத்தப்படுகிறது . ஜூன் 21 -ஆம் தேதி  அறிமுகமான இந்த முறையால் ஒரே நாளில் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு உலக சாதனை படைத்தது இந்தியா என்று செய்திகள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர்மோடியும் முன்களப்பணியாளர்களுக்கும்   ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் நன்றி தெரிவித்து  இது ஒரு புதிய சாதனை என்றும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் அன்று இரவே 88 லட்சம்  தடுப்பூசிகள் போடப்படவில்லை 54 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தகுதியான நபர்கள் அனைவருக்கும் அதிகபட்சமாக போடப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்திருந்தது.

 செவ்வாயன்று இந்த எண்ணிக்கை  54.22 லட்சமாக குறைந்திருந்ததை  காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட  ஞாயிறன்று பதுங்குவது, திங்களன்று தடுப்பூசி போடுவது, செவ்வாயன்று  மீண்டும் பழையபடி நொண்டுவது.

இது தான் ஒரே நாளில் உலக சாதனை அளவுக்கு தடுப்பூசி போடுவதன் பின்னே உள்ள ரகசியம். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் நிச்சயம் இடம்பிடிக்கும். யாருக்கு தெரியும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட மோடி அரசுக்கு கிடைக்கலாம். மோடி இருந்தால் சாத்தியமாகும் என்பதை இனி மோடி இருந்தால் அதிசயம் நடக்கும் என படியுங்கள் என கூறியுள்ளார்.

நாட்டின் பிரதமரே சரியான புள்ளி விவரத்தை வெளியிடாமல் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டதால் பல்வேறு மாநில அரசியல் கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் பிரதமரின் ட்விட்டர் பதிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Top