logo
உயர் மின் பாதை அமைப்பதற்காக விவசாய நிலங்களில் வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

உயர் மின் பாதை அமைப்பதற்காக விவசாய நிலங்களில் வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

23/Jun/2021 08:22:13

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்உயர் மின் பாதை அமைப்பதற்காக விவசாய நிலங்களில் வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்குவதில்  நீடிக்கும் தாமதத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டுமென தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் கே.ஆர். சுதந்திரராசு வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில்  கடந்த 2018-ஆம் ஆண்டு  பவர் கிரிட்  நிறுவனம் உயர்மின் பாதை அமைப்ப தற்காக  விவசாய நிலத்தை விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, நிலங்கள் கையகபடுத்தப்பட்டன. அதன் பிறகு பயிர் சேத மதிப்பும், நிலத்திற்கான இழப்பீடும் விவசாயிகளுக்கு வழங்கபட்டு வருகிறது. பல மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனத்தால் விவசாயிகளுக்கு நேரடியாக இழப்பீட்டு வழங்கப்படுகிறது.

அதில் ஈரோடு மாவட்டத்தில் அரசின் சார்பில் வருவாய் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு தென்னைக்கு ரூ. 31,230 மட்டும் வழங்கப்பட்டது. அதில் அருகிலுள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு தென்னைக்கு ரூ.36,500 வழங்கப்பட்டுள்ளது. இந்த  முரண்பாட்டை களைய வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகு மாவட்ட ஆட்சியர்  உரிய உத்தரவு பிறப்பித்து 360 விவசாய பட்டா நிலங்களில் கணக்கெடுக்கப்பட்டது.

அதில், 13,200  பெரிய தென்னைமரங்களும்  2,600  சிறிய தென்னை மரங்களும் ம் பவர் கிரிட் நிறுவனம் மூலம் வெட்டப் பட்டதாக கணக்கீடு செய்யப்பட்டதுஅதில் இழப்பீடாக  ஒரு மரத்துக்கு ரூ. 4320 வீதம் 7 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. அத்தொகையை  விவசாயிகளுக்கு வழங்க பவர்கிரிட் நிறுவனத்துக்கு  மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டதுதேர்தல் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக  தொகை வழங்கபடாத நிலை நீடித்து வருகிறது.

எனவே மாவட்ட வருவாய் அலுவலர் தலையிட்டு  விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.

Top