logo
கொரோனாவை கட்டுப்படுத்த  போர்க்கால நடவடிக்கையை போல தொழில் துறையை மீட்பதிலும் கவனம் தேவை:  தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கையை போல தொழில் துறையை மீட்பதிலும் கவனம் தேவை: தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

22/Jun/2021 10:01:59

திருப்பூர், ஜூன்: கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் போர்க்கால நடவடிக்கையை போல தொழில் துறையை மீட்பதிலும் தமிழக அரசு  தீவர கவனம் செலுத்த   வேண்டும் என  திருப்பூர் தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

 இந்தியாவின் மிகப்பெரும் பின்னலாடை உற்பத்தியில் மையமாகவும் சர்வதேச முக்கியத் துவம் பெற்ற நகரமாகவும் விளக்குகிறது திருப்பூர். ஆண்டுக்குரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொண்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் முதல் மற்றும் 2-ஆவது  அலையின் தாக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட  பாதிப் பால் தற்போது மிகப்பெரிய பின்னடைவை  சந்தித்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் கொரோனாவின் 2-ஆவது  அலையின்  தாக்கம் தமிழகத்தில் குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் தீவிர நிலையில் இருந்த கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

பின்னலாடை தொழில் மாவட்டமான திருப்பூரில் இரு நாள்களுக்கு முன்னர்  489 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த னர். கடந்த வாரத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த சூழ லில் தற்போது பாதிப்பு அளவு  சரிந்து வருவது  குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலா ளர்களுக்கு வேலை வாய்ப்பளித்து வரும் திருப்பூரின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி பின்னலாடை நிறுவனங்களை சமீபத்திய கரோனா தொற்றின் 2-ஆவது  அலை மிகவும் பாதிக்க செய்துள்ளதால் தொழில் துறையினர் சோர்வடைந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் கொரோ னாவை கட்டுப்படுத்துவதில் காட்டிய வேகத்தை தமிழக அரசு தொழில் துறையை மீட்பதில் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொழில் துறையினர் தரப்பில் முன் வைக்கப் படுகிறது.

கொரோனாவின் தாக்கம் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அதிகமாக நடைபெறும் ஜவுளி தொழிலை கடுமையாக பாதிக்க செய்துள்ளது. பெரும்பாலான சிறு,குறு நிறுவனங்கள் இந்த பாதிப்பில் சிக்கியுள்ளன. திருப்பூர் பின்னலாடை துறை கடந்தாண்டின் கொரோனா முதல்கட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள், அடுத்த பாதிப்புக்குள் சிக்கி சீரழிந்து விட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 90 சதவீதம் கட்டுக்குள் வந்து விட்டது. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்ட ஓய்வற்ற நடவடிக்கைகளால் இத்தகை நிலை உருவாகியுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த  எடுக்கப்பட்ட போர்க் கால நடவடிக்கைகளை தொழில் துறையை மீட்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தொழில் இருந்தால் மட்டுமே தொழில் துறையினர், தொழிலாளர்கள் அனைவரது வாழ்வாதாரம் காக்கப்படும். அதற்கு முதற்கட்டமாக தொழில் துறையினர் அனைவருக்கும் எளிய முறையில் கையில் கிடைக்கும் வகையில் கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

2 மாதங்களுக்கு தவணை செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசிடம் கோரி உதவிகளை பெற்றுத் தருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் (டீமா) எம்.பி.முத்துரத்தினம்.

 திருப்பூரில் மொத்த உற்பத்தி திறனில் 40 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியை சேர்ந்தது. உள்நாட்டு உற்பத்திக்கான முக்கிய சந்தைகளாக உள்ள தில்லி உள்ளிட்ட மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளதால், ஆர்டர்கள் வரத் தொடங்கும் நல்ல சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்  திருப்பூர் தொழில் துறையினர். 

திருப்பூர் பின்னலாடை துறையில் ஏற்றுமதி மற்றும் அவற்றுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. விதி களை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்த வருகிறது.  இச்சூழலில் பாகுபாடு இல்லாமல் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை இயக்கவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழில் துறையினர் முன்வைக்கின்றனர்.

.

Top