logo
ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக  262  வாகனங்கள் பறிமுதல்: 2.78 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 262 வாகனங்கள் பறிமுதல்: 2.78 லட்சம் பறிமுதல்

17/Jun/2021 07:26:41

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக  262  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ 2.78 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 21 -ஆம்  தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி  சசிமோகன் தெரிவித்திருந்தார்.

24-ஆவது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டனர்.வியாழக்கிழமை மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 178 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

மேலும் 245 இருசக்கரவாகனங்களும், 17சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்ததுடன்  2.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும்  போலீசார் தெரிவித்தனர். இன்று கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதில் இ-பதிவுப் பெற்ற வாகனங்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. இ-பதிவு இல்லாத வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.


Top