logo
காவிரிப் படுகைப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது பழ. நெடுமாறன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

காவிரிப் படுகைப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது பழ. நெடுமாறன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

16/Jun/2021 07:04:11

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

காவிரிப் படுகைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு சட்டப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசின் மத்தியப் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இதை கொஞ்சமும் மதிக்காதப் போக்கில் நடந்து கொண்டுள்ளது.

காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த வடதெரு என்னும் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

அதே வேளையில் தமிழக அரசின் சட்டத்தை மதிக்காமல் இந்திய அரசின் அதிகாரிகள் செயல்படுவார்களானால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையினை எடுக்க தமிழக முதல்வர் ஒரு போதும் தயங்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

ஹைட்ரோ கார்பன் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளை எதிர்த்து நீண்ட நெடுங்காலமாக காவிரிப் படுகை விவசாயிகள் போராடி வந்திருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் விளைவாகதான் காவிரிப் படுகைப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்பதையும் நினைவுப் படுத்துகிறேன்.

 

Top