logo
மறைந்த ராமகோபாலனுக்கு இந்துமுன்னணியினர் வீர அஞ்சலி

மறைந்த ராமகோபாலனுக்கு இந்துமுன்னணியினர் வீர அஞ்சலி

01/Oct/2020 03:12:13

ஈரோடு: இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக இந்து முன்னணி பேரியக்கத்தின்  நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா ராமகோபாலனின்  மறைவிற்கு இன்று (1.10.2020) காலை  வீர அஞ்சலி செலுத்தப்பட்டது .

ரங்கம்பாளையம், பெரியவலசு, சூரம்பட்டி, மூலப்பாளையம், ஆர்.என்.புதூர், திண்டல், பெரியசேமூர், வீரப்பன் சாத்திரம் ,   அசோகபுரம், கிருஷ்ணம்பாளையம், மொடக்குறிச்சி,சென்னிமலை,  லக்காபுரம், பூந்துறை, சின்னியம்பாளையம் , ஊத்துக்குளி, கொடுமுடி, பெருந்துறை, சித்தோடு, வெள்ளோடு உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ராமகோபாலனின் உருவப்படத்துக்கு மாவட்ட நகர் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர் 

Top