logo
அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயல்பாடுகளை துரிதப்படுத்த ஏஐடியுசி தொழில் சங்கம் கோரிக்கை

அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயல்பாடுகளை துரிதப்படுத்த ஏஐடியுசி தொழில் சங்கம் கோரிக்கை

13/Jun/2021 10:34:28

புதுக்கோட்டை, ஜூன்: அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயல்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட  ஏஐடியுசி தொழில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக  தமிழ்நாடு ஏஐடியுசி தொழிலாளர் சங்க புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் கே. ஆர். தர்மராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கொரோனா  நோய்த்தொற்று காலத்திலும்  தொழிலாளர் நலன் காக்க  கடமையாற்றும் அலுவலக பணியாளர்களை நன்றி பாராட்டி வணங்குகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில்  நலவாரிய செயல்பாடுகள் மிகவும் மந்த நிலையில் நடைபெறுகிறது. கடந்த 10. 6.2020-இல் இணையவழி பதிவு தொடங்கி  தற்போது வரை  சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் இணையவழியில் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள்  விண்ணப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டுமே பணியாற்றக்கூடிய  தொழிலாளர் உதவி ஆணையர் இல்லாததாலும்  கணினி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும்  பணிகள் மிகவும்  தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

எனவே,.கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும், .கிராம நிர்வாக அலுவலர் சரிபார்ப்பு சான்று கிராம நிர்வாக தொழிலாளர்களின்  சரிபார்ப்பு சான்று இணையவழியில் பரிந்துரை செய்வது தொடர்பாக எங்கள்  உயர் அதிகாரிகளிடம் இருந்து வழிகாட்டுதல் இதுவரை ஏதும் வரவில்லை என கூறுகிறார்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையவழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு  7 மாதத்திற்கு மேல் காலதாமதம் ஆகியும்  சரிபார்ப்பு சான்று Onlineல் farwerd  செய்யப்படாமல்  உள்ளது.

சில  கிராமங்களில்  சம்மந்தப்பட்ட தொழிலாளியை  விசாரிக்காமலும்  விளக்கம் கேட்காமலும்  விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகிறது. தொழிலாளர்கள் நேரில் சென்று கிராம நிர்வாக அலுவலர்களிடம் சரிபார்ப்பு சான்று பெற்ற விண்ணப்பங்கள் கூட  ஆன்லைனில் நிராகரிக்கப்படுகிறது.

இவைகள் உரிய வழிகாட்டுதலின் படி நிவர்த்தி செய்யப்பட வேண்டும். புதுக்கோட்டைமாவட்ட  தொழிலாளர் உதவி ஆணையர்  சமூக பாதுகாப்பு திட்டம்  பிற மாவட்ட அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்காமல் இம்மாவட்டத்திற்கு க்கென தனியாக அதிகாரி நியமனம் செய்ய  வேண்டும்.

2020 ஜூலை மாதம் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள்  கூட இதுநாள்வரை  பரிசீலிக்க படாமல்  உள்ளது தொடர்ந்து  10 மாதங்கள் காலதாமதம் ஆகிறது  இப்போது இயங்கும் கணினிகள் பழையதாகவும்  செயல்திறன் குறைவானதாகவும்  உள்ளது. கணினிகள் போதுமான எண்ணிக்கையில்  இல்லாமல் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான்  உள்ளது எனவே தேவையான எண்ணிக்கையில் புதிய  கணினிகள்  வழங்க ஆவண செய்ய வேண்டும்.

ஏறத்தாழ  ஒன்றரை லட்சம் தொழிலாளர்களின்  நலன் சார்ந்த இந்த அலுவலகத்திற்கு  கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்பதிவு தேதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து விண்ணப்பங்கள்  பரிசீலிக்கப்பட வேண்டும்தேங்கிக்கிடக்கும்  ஓய்வூதியம் கல்வி  திருமண உதவி விண்ணப்பங்கள் பரிசீலித்து உடன் உதவிகளை வழங்கிட வேண்டும்.  

இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்து நலவாரிய செயல்பாடுகளை  துரிதப்படுத்தி தொழிலாளர்களுக்கு உதவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்..

Top