logo
நியாய விலைக் கடைகளில் ஜூன்15 முதல் இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கப்படும்

நியாய விலைக் கடைகளில் ஜூன்15 முதல் இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கப்படும்

13/Jun/2021 12:11:20

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில்வரும் செவ்வாய்க்கிழமை (15.6.2021) முதல்  14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும்  2-ஆம் தவணை உதவித்தொகை ரூ.2,000ம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர்  வே.சரவணன் வெளியிட்ட தகவல்கொரோனா நோய் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்; குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து இன்றியமையா பண்டங்கள் விநியோகம் செய்யும் பொருட்டு நியாயவிலைக் கடைகள் தினந்தோறும் காலை 9 மணி நண்பகல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதித்து செயல்பாட்டில் உள்ளது.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வண்ணம் ஏற்கனவே முந்தைய மாதங்களில் கடைபிடித்தது  போலவே ஜுன் 2021 மாத பொது விநியோகத்; திட்ட பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு பாதுகாப்புடன் சுழற்சி முறையில் வழங்குவதற்கு ஏதுவாக நாள் ஒன்றுக்கு100 டோக்கன்கள் வீதம் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பினையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட் நிவாரண உதவித் தொகை 2ம் தவணை ரூ.2,000ற்கான டோக்கன்களை மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு15.6.2021 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யும் பொருட்டு 11.6.2021 முதல் 14.6.2021 முடிய உள்ளூர் சூழ்நிலைகளுக்கேற்ப நாள் ஒன்றுக்கு 75 முதல் 200 டோக்கன்களுக்கு மிகாமல் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்குவதற்கு  தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ற்போது உள்ளூர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரின் அறிவிக்கையின் பேரிலும் தமிழ்நாட்டில் முதற் கட்டமாக 15.6.2021 முதல் 18.6.2021 முடிய நான்கு தினங்களுக்கு கடைகளில் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு கடையிலும் நாளொன்றுக்கு அதிகபட்ச அளவாக 100 டோக்கன்கள் மட்டும் விநியோகம் செய்யவும், இம்மாதத்தில் தொடரும் இதர பணி நாட்களில் நாளொன்றுக்கு தேவையின் அடிப்படையில் அதிக பட்சமாக 200 டோக்கன்கள் வரை விநியோகம் செய்யவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்  தொற்றிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு முகக் கவசம் அணிந்தும் மற்றும்   2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்தும், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2,000 -ம் வெளிப்படையாக 15.06.2021 முதல் தொடர்புடைய நியாய விலை கடை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாக புகாரை பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் புதுக்கோட்டை, மாவட்ட குறைதீர்க்கும் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் () நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் 04322-220946 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94450 00311 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்

Top