logo
உலக முதியோர் (அக்டோபர்- 1) தினம் இன்று...

உலக முதியோர் (அக்டோபர்- 1) தினம் இன்று...

01/Oct/2020 12:33:38

உலக முதியோர் தினத்தில் முதியோர் ஆகப்போகும் நாம் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்

ஆண்டொன்று போனால் அகவை ஒன்று போகும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை அனுபவங்களின் அமுதசுரபியாக முதியவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது

வயது முதுமைக்கான அளவுகோல் இல்லை என்றாலும், வயதானவர்களை முதியவர்கள் என்றழைப்பது அந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.2030 -ஆம் ஆண்டுக்குள் உலகின் முதியவர்களின் எண்ணிக்கை 46சதவீதம் அதிகரிக்கும் என்று ஐநாவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போது 943 மில்லியனாக இருக்கும் உலக முதியவர்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனாக உயருமாம்

இந்த முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.கடந்த 1991 -ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் இந்த தினம் உலகெங்கும் அறிவிக்கப்பட்டது.வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகமான எண்ணிக்கையில் முதியவர்கள் வாழ்ந்த ஆண்டு 2020 ஆகத்தான் இருக்கும் என்பது இங்கு ஒரு கூடுதல் தகவல்

வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள்முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு முறையை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியாத காலம் வரட்டும்.

Top