logo
அரசின் காப்பீட்டுத்திட்டத்தை மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: முதல்வருக்கு கரூர் எம்பி  கோரிக்கை

அரசின் காப்பீட்டுத்திட்டத்தை மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: முதல்வருக்கு கரூர் எம்பி கோரிக்கை

09/Jun/2021 05:30:38

கரூர், ஜூன்: முதலமைச்சவரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கரூர் எம்பி  கோரிக்கை விடுத்துள்ளார் .

 து தொடர்பாக கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ். ஜோதிமணி தமிழக முதல்வர் மு.. ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்:

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் விரிவான நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன இக்காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க மறுப்பது குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கொரோனா  மட்டுமல்லாது இதய அறுவை சிகிச்சை மூளை அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை எடுத்து வருவோருக்கும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செல்லாது என்று தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக தினமும் பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.

இந்த இக்கட்டான காலத்தில் ஏற்கெனவே ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தனியார் மருத்துமனையில் இரக்கமற்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மீண்டும் அனுப்பி அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாவட்ட அளவில் குழு அமைத்து அரசின் காப்பீட்டுத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் கண்காணிக்க  வேண்டும் என அதில்  எம்பி- ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

Top