logo
ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்கள் 234 பேர்  அறிமுகம்

ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 234 பேர் அறிமுகம்

07/Mar/2021 10:59:50

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிடும்   வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வு செய்தார். 

பெண்களுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், இந்த தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக்கிழமை  அறிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஒரே மேடையில் வேட்பாளர்கள் அனைவரையும் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்

Top