logo

11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: கல்வித்துறை அறிவிப்பு

08/Jun/2021 08:27:59

சென்னை, ஜூன்: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைவெளியிட்டுள்ள அறிவிப்புஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டஇடங்களைக்காட்டிலும் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை கூடுதலாக  மாணவர்களை சேர்க்கலாம். குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.

 அதிக விண்ணப்பங்களைப் பெறும் பாடப்பிரிவிற்கு தொடர்புடைய பாடங்களில் இருந்து 50 வினாக்களில் தேர்வுகளை நடத்தலாம் எனவும் அதன்மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளலாம்.

11-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 3-ஆம் வாரத்தில் தொலைதொடர்பு முறையில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனவும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சிகள் மூலமாகவும், தொலைதொடர்பு முறையிலும் வகுப்புகளை நடத்த  வழிகாட்டப்பட்டுள்ளது.

Top