05/Jun/2021 07:00:38
புதுக்கோட்டை, ஜூன்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பல்லுயிர் சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்த விவசாயிகள், விஞ்ஞானிகள் தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி, வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், பல்லுயிர் பாதுகாப்பு, பருவகால மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புக்கள், மரம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பின் முக்கியத்துவம், பாதிக்கப்பட்ட மண் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை மண் வளத்தை மேம் படுத்தல், அங்கக உர பயன்பாடு, விவசாய நிலங்களில் மண் பரிசோதனைக்கான மண் , பாசன நீர் பரிசோதனையின் அவசியம் குறித்து தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்ட விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) முனைவர் ஞா. பிரபு குமார், உதவி பேராசிரியர்கள் முனைவர் டி.ஷெரின் ஜெனிட்டா ராஜம்மாள் (மண்ணியல்) , முனைவர் கே. நெல்சன் நவமணி ராஜ் ( விதை நுட்பவியல்).
திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் ஜி.வி. கோபிநாத், சுற்றுச் சூழல்
ஆர்வலர் மருத்துவர். ஷோபனா, நக்ககீர் தென்னை
விவசாயிகள் உற்பத்தியாளர்கள்
நிறுவன தலைவர் காமராசு, முன்னோடி விவசாயிகள்
அன்புச் செல்வம், தங்க கண்ணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மாவட்ட மேலாளர் அன்பழகன் நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை
மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 க்கும் மேற்பட்ட விவசாயிகள்
தொலைபேசி வழியாக கலந்துகொண்டனர்.