logo
முன்னாள் முதல்வர் கருணாநிதி 98-ஆவது பிறந்த நாள்... பொன்னமராவதியில் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி 98-ஆவது பிறந்த நாள்... பொன்னமராவதியில் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

03/Jun/2021 05:21:03

புதுக்கோட்டை, ஜூன்: முன்னாள் முதல்வர் கருணாநிதி 98-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொன்னமராவதி  அரசு மருத்துவமனைக்கு ரொட்டி, சோப் ஆயில், பினாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

 புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக  சார்பில் மாவட்ட துணைச் செயலாளர்  சின்னையா தலைமையில்  பொன்னமராவதியில் அரசு பப்பாயி ஆச்சி  மருத்துவமனையில்  கொரோனா  நோயாளிகள் பயன் பெரும் வகையில் ரொட்டி  மற்றும் சோப் ஆயில், பினாயில் உள்ளிட்ட பொருள்களை  தலைமை மருத்துவர் செந்தமிழ்செல்வியிடம் நிர்வாகிகள்  வழங்கினர்.

இதில் பொன்னமராவதி நகர செயலாளர் அழகப்பன்மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், தென்னரசு,அவைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி,முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜா,வெங்கடேஷ்,கோவை ராமன்,   சமூக வலைதள தொகுதி பொறுப்பாளர் ஆலவயல் முரளிசுப்பையா, ஒன்றிய,நகர தகவல் தொழில் நுட்ப அணி கருணாநிதி,இம்ரான், இளைஞரணி அமைப்பாளர் கணேசன், விகாஷ், ராஜா, பாண்டியன், சத்யா,தளபதி சன்மூகம்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராபர்ட் ,அரவிந்த் ஆகியோர்  பங்கேற்றனர்.

 

பொன்னமராவதி நகர  திமுக  சார்பில் ஊரடங்கால்  பாதிக்கபட்ட ஏழை எளிய மக்களுக்கு  உணவு வழங்கல்.

  

முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின்  98-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொன்னமராவதி நகர  திமுக  சார்பில்  கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அண்ணா சிலை மற்றும் கருணாநிதி   உருவப்படத்திற்கு  நிர்வாகிகள் மாலை அணிவித்து   மரியாதை செய்தனர்மேலும்  ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர் 150 பேருக்கு  உணவு பொட்டலங்கள் வழங்கபட்டது.

இதில்  நகர செயலாளர் அழகப்பன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா முன்னிலை வகித்தார் இதில் திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

                                                  

Top