logo
அக். 2 -முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

அக். 2 -முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

30/Sep/2020 05:40:35

வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் உள்பட தமிழகத்திலுள்ள மேலும்  4  ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

கரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் பொதுமுடக்கத்தில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சில வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது

சென்னை-ராமேஸ்வரம் இடையே ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அக்டோபர் 2 -ஆம் தேதி முதல் தினசரி சென்னை-ராமேஸ்வரம்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் தினசரி மதுரை வழியாக சென்னை-செங்கோட்டை-சென்னை, சென்னை-தென்காசி-சென்னை ஆகிய இடங்களுக்கும் வாரத்தில் 6 நாட்கள் மட்டும் சென்னை- மதுரை-சென்னை இடையே தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு வசதி அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

Top