logo
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 300 படுக்கைகள்

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 300 படுக்கைகள்

28/May/2021 10:09:24

ஈரோடு, மே : ஈரோடு  பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகளை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களினன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் செய்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை முழுமையாக கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்குஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகேயுள்ள மாவட்டங்களிலிருந்தும் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 550 படுக்கைகளும் நிரம்பிய நிலையில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதி கள் உருவாக்கப்பட் நிலையில் வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். 

இதையடுத்து  அமைச்சர் முத்துசாமி மேலும் கூறியதாவது: ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 800 ஆக்சிஜன் படுக்கைகள் விரைவில் அமைக்கும்  பணிகள் நடைபெற்று வருவதாகவும்  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு மேற் கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அமைச்சர் முத்துசாமி.

Top