logo
அத்தியாவசியப் பொருட்களை பெற குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளிலேயே டோக்கன் விநியோகம்

அத்தியாவசியப் பொருட்களை பெற குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளிலேயே டோக்கன் விநியோகம்

30/Sep/2020 05:21:27

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனோ நோய்த் தொற்று  ஏற்படாத வகையில் அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், அக்டோபர்(2020) மாத பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடையில் கூட்ட நெரிசலின்றி பெற வசதியாக  நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு  செப்.28, 20 மற்றும் 30  ஆகிய 3 தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது

அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்சம்மந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர;கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க செல்ல வேண்டும். மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே நியாய விலைக் கடைக்கு செல்ல வேண்டும்.

இம்மாதம் PHH-AAY குடும்ப அட்டை ஒன்றுக்கு கூடுதலாக தலா 1 கிலோ கோதுமை விலையின்றி இதர அத்தியாசியப் பொருட்களுடன் வழங்கப்படும். மேலும் தற்போது பெறப்படும் கோதுமைக்கு ஈடாக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்ட அரிசி உரிம அளவிலிருந்து குறைத்து வழங்கப்படும்

 தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களுக்கு அந்தந்தப் பகுதி நியாய விலைக் கடை பணியாளர்கள்   நேரில் சென்று பொது விநியோகத் திட்ட  அத்தியாவசியப் பொருட்களை வழங்குவார்கள்

 இந்த நடைமுறையின்படி அக்டோபர்-1-ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.   பொருளாதாரத்தில் பின்தங்கிய PHH, PHH-AAY, ANP, OAP  மற்றும் மாற்றுத் திறனாளிகளின்  குடும்ப அட்டைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்குவதற்கு மாவட்ட நிரிவாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தரமான முகக்கவசங்கள் அனைத்து  குடும்ப அட்டைகளுக்கும் குடும்ப உறுப்பினா;கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நபா; ஒருவருக்கு 2(இரண்டு) முகக்கவசங்கள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகக்கவசங்களை குடும்ப அட்டைதாரா;கள் இன்றியமையாப் பண்டங்கள் வாங்கும் போது பெற்றுக் கொள்ளலாம். 2-ஆம் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் 6,53,000 எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3.10.2020 முதல் வழங்கப்பட உள்ளன.

 பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், ஒருவருக்கொருவர் 1 மீட்டா; சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்  அத்தியாவசியப் பொருட்களை தொடர்புடைய நியாய விலைக் கடையில் அரசு நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

Top