logo
108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு ஓட்டுநர், உதவியாளர் பணிக்கு புதுக்கோட்டையில் நேர்முகத்தேர்வு

108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு ஓட்டுநர், உதவியாளர் பணிக்கு புதுக்கோட்டையில் நேர்முகத்தேர்வு

30/Sep/2020 05:04:20

புதுக்கோட்டை:108 ஆம்புலன்ஸ் h;திக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர கால உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்முகத் தேர்வு 3.10.2020 மற்றும் 4.10.2020 (சனி-ஞாயிறு)    காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு பெறுபவர்கள்  தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் 12 மணி நேரம் இரவு, பகல் என சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும்

மருத்துவ உதவியாளர்  பணியிடத்துக்கு ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம் பி.எஸ்.சி மற்றும் டி.ஜி.என்.எம், நர்சிங், பி.எஸ்.சி அல்லது எம்.எஸ்.சி, தாவரவியல், விலங்கியல,; மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோடெக், பியூர் கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும்.19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

மருத்துவ உதவி பயிற்சியாளர்களுக்கு எழுத்துத் தேர்வு மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி பணி தொடர்பாகவும் மற்றும் மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ளலாம். மருத்துவ உதவியாளர் ஊதியம் ரூ.13,760 ஆகும்

 ஓட்டுநர் பணியிடத்திற்கு ஆண்கள்  விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு  அன்று 24 வயதுக்கு  மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ-க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு முடித்திருக்க வேண்டும். ஆம்புலனஸ் ஓட்டுநர் ஊதியம் ரூ.13,265 ஆகும்மேலும் விவரங்களுக்கு 73977 01807 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Top