26/May/2021 06:42:27
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உலக நம்மை காகவும் வைகாசி விசாகத்தை முன்னிட்டும் ஸ்ரீ ஸகந்த ஹோமம் புதன்கிழமை(மே.26) சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அதி காலையில் கோயிலில் நடைபெற்ற வைகாசி விசாகத்தின்போது ஸ்ரீ ஸகந்த ஹோமம் பூரணா ஹுதி நடைபெற்றது. பின்னர் தண்டாயுதபாணி சுவாமிக் கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட் ட பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்த து. தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அருள் பாலித்தார்.