19/Jun/2021 05:16:17
திருச்சி ஜங்ஷன் பகுதியில் கட்டிமுடிக்க முடியாமல் பாதியில் நிற்கும் மேம்பாலப் பணியில் உள்ள தேக்கநிலை தொடர்பாக மத்திய (ராணுவம்) பாதுகாப்புத்துறை அமைச்சரை திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சு, திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை (இராணுவம்) துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை (19.6.2021) காலை சுமார் 10.30 மணியளவில் புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின்
ஒரு பகுதி கட்டி முடிக்க தேவைப்படும் இராணுவத்திற்கு சொந்தமான இடத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவத்
துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார்.