logo
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பெருந்துறை எம்எல்ஏ- ஜெயக்குமார் கோரிக்கை

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பெருந்துறை எம்எல்ஏ- ஜெயக்குமார் கோரிக்கை

23/May/2021 05:14:38

ஈரோடு, மே: பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பெருந்துறை எம்எல்ஏ- ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வந்த ஐஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை   பொதுமக்களின் கோரிக்கையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரைவேற்றும் வகையில்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையாக மாற்றினார்.

கடந்த ஓராண்டு காலமாக இது முழுமையான கொரோனா சிறப்பு மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா  தீவிர பரவல் காரணமாக ஏராளமான நோயாளிகள் மாவட்டம் முழுவதும் இருந்து சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர். இவர்களுக்காக இங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும்,தூய்மை பணியாளர்களும் மிகுந்த அர்பணிப்புடன் பணிபுரிந்து வருவது பாராட்டத்தக்கது.

ஆனால் இவர்களை நிர்வாகம் செய்யும் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட சிலர் மீது ஏராளமான புகார்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நாள்தோறும் வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரி,மற்றும் இளநிலை நிர்வாக அதிகாரிகள் பதவி காலியாக இருப்பதால் மருத்துவமனை நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது

இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மகப்பேறு மருத்துவர் புவனேஸ்வரி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் இறந்து ஒரு மாதம் ஆகியும் இவருக்கு வழங்க வேண்டிய 25 லட்சம் அரசு நிவாரண நிதி கிடைக்கப்பெறவில்லை. இவருடைய கணவர் பாலு அவர்களும் இந்த மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவதிப்பட்டு வருகிறார்.இவர்களுக்கு கிடைக்கவேண்டிய பணப்பலன் இதுவரை கிடைக்கவில்லை.

நேற்று முன் தினம் ஆய்வக உதவியாளராக பணி புரிந்த ஜெமினி என்பவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இது போல உயிரை பணயம் வைத்து இந்த சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் போதிய பாதுகாப்பு வசதிகளும், அவர்களுக்கு தேவையான ஓய்வும் வழங்கப்படுவது இல்லை

இந்த குறைபாடுகள்  நிர்வாக அதிகாரி பதவியிடம் காலியாக இருப்பதாலும், இந்த நிர்வாத்தை மற்றவர்கள் கவணிப்பதாலும் காலதாமதம் ஏற்படுவதோடும் நிர்வாக சீரகேட்டிற்கும் வழி வகுக்கிறது.தினந்தோறும் ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை உள்ளே விடாமல் பிரதான நுழைவு வாயில் பூட்டப்படுகிறது. பாதுகாவலர்களும், போலீசாரும் நோயாளிகளை விரட்டி வெளியேற்றுவதாக எங்கள் அலுவலகத்திற்குதொலைபேசி மூலம் எந்த நேரமும் புகார் வந்துகொண்டே இருக்கிறது.

இது குறித்து தொலைபேசியில் கேட்கும்போது முதல்வர் உள்ளிட்ட நிர்வாக குழு மருத்துவர்கள் யாரிடமும் பேச முடிவதில்லை.  நுழைவு வாயிலில் எந்த ஒரு ததவலும் முறையாக சொல்ல ஆளில்லை.அங்கே ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை காவல்துறையின் மூலம் அப்புறப்படுத்துவது கொடுமையின் உச்சகட்டம்.

நிர்வாக குழுவின் இது மாதிரியான செயல்களால் மனித உரிமை மீறல் என்பதையும் தாண்டி தங்கள் உயிரையும் மதிக்காமால் சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கும் இது அவப்பெயரையும் ஏற்படுகிறதுபெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளையும்,ஆலோசனைகளையும் வழங்கும் பெறுப்பும் கடமையும் சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களையும், தடுப்பூசி போட வருபவர்களையும், நோய் தாக்குதல் இல்லாதவர்களையும் ஒரே இடத்தில் கூட வைத்திருக்கும்  நிலை இங்கு உள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் நான்கு ஐந்து நாள் கழித்து தான் வெளியிடப் படுகிறது. இதனால் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

24 மணிநேரமும் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை நுழைவு வாயில்கள்  கடந்த நான்கு நாட்களாக இரவில் பூட்டப்பட்டு நோயாளிகள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் தற்போது பகலிலேயே நுழைவு வாயிலை பூட்டி போலீசார் மூலம் நோயாளிகள் விரட்டப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு எந்த நோக்கில் இந்த அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டதோ அதனை சீர்குலைக்காமல் நோயாளிகள் நலத்தில் அக்கறை செலுத்தவேண்டும்.மருத்துவமனை முன்பு தகவல் மையம் அமைத்து நோயாளிகளுக்கு முறையான வழிகாட்ட வேண்டும்.உடனடியாக நிர்வாக அதிகாரிகளை அரசு நியமனம் செய்து மருத்துவர்கள் செவிலியர்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான நலனும், பலனும் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பெருந்துறை எம்எல்ஏ- ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Top