logo

புதுக்கோட்டையில் மழைநீர் நீர் நிலைகளுக்குச்செல்லும் வகையில் வடிகால்கள் சீரமைக்கப்படுமா?

30/Sep/2020 08:45:33

கடந்த ஒரு வார காலமாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் புதுக்கோட்டை நகரின் பல இடங்களில் மழை நீர் சாலைகளில் குளம் போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது

பெய்துவரும்  மழைநீரானது நீர் நிலைகளுக்குச்செல்லும் வகையில் மன்னர் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட   வடிகால்களை தூர் வாரினால் சாலைகளில் தேங்கி நிற்காமல் எளிதில் குளங்களில் சென்று சேரும். நிலத்தடிநீரின் மட்டமும் உயரும். எனவே அனைத்து வடிகால்களையும் சீரமைக்க வேண்டியது அவசியமாகும். எப்போது மழை பெய்தாலும் புதுக்கோட்டை நகரில் பழனியப்பா முக்கத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்பது வழக்காமாகிக் கொண்டிருக்கிறது. இதைப்போல நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் வழிந்தோடுவது வாடிக்கையான நிகழ்வாகும். இதைத்தடுக்க அப்பகுதியில் உள்ளமழை நீர் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி அடைப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும்,பொது மக்களிடமும்  மழைநீர் சேகரிப்பை கலாசாரமாக மாற்றும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த  வேண்டும். தற்போது பெய்யக்கூடிய  மழை நீரை  வீணாக்காமல் சேமித்தாலே நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்பதை அனைவருக்கும் வலியுறுத்த வேண்டும்.   நிலத்தடி நீரை இது போன்ற செயற்கை முறையில் அதிகப்படுத்துவதும், நிலத்தடி நீர் மட்டத்தை இயற்கை சூழ்நிலையில் அதிகப்படுத்துவதும் அவசியமாகும். நீர்த்தேங்கக்கூடிய பகுதிகளில் மனிதனால் ஏற்படுத்தபடுத்தப்பட்ட அமைப்பும் செயற்கை முறையில் நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதாகும். நில மேற்பரப்பில் உள்ள தண்ணீர் நம்முடைய தேவைகளுக்கு போதுமானவையாக இல்லை. ஆகவே நாம் நிலத்தடி நீரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. நகரமயமாதல், நிலத்தடி நீரின் அளவும் வேகமாக குறைகிறது. அதனால் நிலத்தடிநீரின் மட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வழிந்தோடும் மழைநீரை சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்ற செயற்கை அமைப்புகள் மூலம்  நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எடுக்க  வேண்டுமென   சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

                                                                               

        


Top