logo
கொரோனா பேரிடர் நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் முடிவு

கொரோனா பேரிடர் நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் முடிவு

17/May/2021 10:02:55

புதுக்கோட்டை ஏப்:  தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து   கால்நடைத்துறையில் பணியாற்றும் முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் தங்களது மே மாத ஊதியத்திலிருந்து  ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

மிழ்நாடு முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம்  இணையவழியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சண்முகம் தலைமை வகித்தார். நடைபெற்ற வேலைகள் மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து மாநிலப் பொதுச்செயலாளர் கே.குமரேசன் பேசினார்.

கொரோனாகால பேரிடர் நிவாரண நிதி வழங்குமாறு அண்மையில் தமிழக முதல்வர்  மு..ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் தமிழக அரசின் கால்நடைத்துறையில் பன்முக மருத்துவமனை, பிரதம மருத்துவமனை, கால்நடை மருத்துவமனைகளில் பணியாற்றும் முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் தங்களது மே மாத ஊதியத்திலிருந்து ஒருநாள் ஊதியத்தை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் எஸ்.லெனின், இணைச் செயலாளர்கள் வி.சுப்பிரமணியன், எஸ்.வேலுச்சாமி, அமைப்புச் செயலாளர் .கருணாநிதி, தலைமை நிலையச் செயலாளர் வி.பாலு உள்ளிட்ட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்முன்னதாக மாநில துணைத்தலைவர் பி.இளங்கோவன் வரவேற்றார். பொருளாளர் கு.ராஜகுமாரன் நன்றி கூறினார்

Top